ஒட்டக்கூத்தர் முதலியார்

0

 


செங்குந்தர் கைக்கோள முதலியார்            
⚜️குலத் தோன்றல்⚜️
புகழ்மிக்க 3 சோழ மன்னர்களின் அமைச்சர், இராஜகுரு மற்றும் அவைப்புலவர்
ஒட்டக்கூத்தர் முதலியார்



ஒட்டக்கூத்தர் என்பவர் 11-12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் 3 சோழ மன்னர்களின் அமைச்சராகவும், அவைப் புலவராகவும் இருந்தவர். 

பிறப்பு:
இவர் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மணக்குடி என்னும் ஊரில் நவவீரர் வம்சமான செங்குந்தர் கைக்கோளர் முதலியார் மரபில்  பிறந்தார்.


வாழ்க்கை
ஒட்டக்கூத்தர் முதல் குலோத்துங்க சோழனின் மகன் விக்கிரம சோழனின் (கி.பி.1120 - 1136) அவைக்களப்புலவராக திகழ்ந்தார். விக்கிரம சோழனின் மகன் 2-ம் குலோத்துங்க சோழனுக்கும் (கி.பி. 1136 - 1150), அவரின் மகன் 2-ம் ராஜராஜனுக்கும் (கி.பி.1150 - 1163) அவைக்களப்புலவராகவும், தமிழ் ஆசிரியராகவும் திகழ்ந்தார் ஒட்டக்கூத்தர். மூன்று சோழ மன்னர்களுக்கு தொடர்ந்து அவைக்களப் புலவராக திகழ்ந்த பெருமை ஒட்டக்கூத்தரையே சாரும்.
இவருக்குப் பல பட்டங்கள் இருந்தன. அவற்றுள் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சதன் என்பன குறிப்பிடத்தக்கன. “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் ” என்பது வாய்மொழி வழக்கு.
நளவெண்பா இயற்றிய புகழேந்திப் புலவர் இவர் காலத்தில் வாழ்ந்தவர் கம்பரின் பிறந்த-நாளையும், மறைந்த நாளையும் நினைவுகூர்ந்து இவர் பாடியுள்ள இவரது பாடல்கள் கம்பர் இவரது காலத்துக்கு முந்தியவர் என்னும் வரலாற்று உண்மையை வெளிப்படுத்துகின்றன. 
காஞ்சிபுரத்தில் இருந்துகொண்டு அக்காலத்தில் ஆட்சி புரிந்துவந்த காங்கேயன் என்பவன் இவரைப் பேணிய வள்ளல். 
குலோத்துங்கன் போரைச் சிறப்பித்துப் பாடிய இவரது பாடல்கள் தனிப்பாடல் திரட்டில் உள்ளன. 
இவர் இயற்றிய குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ் என்ற சைவச்சிற்றிலக்கிய நூலே தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத்தமிழ் நூலாகும்.
பூந்தோட்டம் ஊரில் சரஸ்வதி கோயிலை ஒட்டக்கூத்தர் கட்டியதாகவும், அதனால் பூந்தோட்டம் அவரது பெயராலேயே கூத்தனூர் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.


பெயர்ப் பொருள்
கூத்தர் முதலியார் என்பதுதான் இவரது இயற்பெயர். இவர் 'ஒட்டம்' (பந்தயம்) வைத்துப் இலக்கியம் பாடுவதில் வல்லவர் என்பதால் ஒட்டக்கூத்தர் என்று வழங்கப்பட்டார்.


இயற்றிய நூல்கள்:
மூவர் உலா
தக்கயாகப் பரணி
கம்பராமாயண்த்தில் உத்தரகாண்டம்
குலேத்துங்கன் பிள்ளைத்தமிழ்
கலிங்கப்பரணி
காங்கேயன் நாலாயிரக் கோவை
எதிர் நூல்
ஈட்டியெழுபது
அரும்பைத் தொள்ளாயிரம்
எழுப்பெழுபது
கண்டன்  கோவை
கண்டன் அலங்காரம்
தில்லை உலா.


குறிப்பு:
செங்குந்த கைக்கோள முதலியார் மரபினர்கள் தங்களின் வரலாற்றை பாடல்களை இயற்றி தர ஒட்டக்கூத்தரிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் ஒட்டக்கூத்தர் அவர்கள்  வரலாற்றை எழுத மறுத்தார்.
மீண்டும் மீண்டும் பலமுறை ஒட்டக்கூத்தர் இடமும் மரபினர் தங்கள் வரலாற்றை எழுதி தருமாறு வற்புறுத்தினர். பிறகு ஒட்டக்கூத்தரும் சரி எழுதித்தருகிறேன் ஆனால் இதற்கு காணிக்கையாக எனக்கு 1008 செங்குந்த கைக்கோளர் ஆண்மகனின் தலை காணிக்கையாக வேண்டும் என்றார். செங்குந்தர் கைக்கோளர் மரபினரும் சிறிதும் கவலைப்படாமல் 72 செங்குந்தர் நாட்டில் வாழும் செங்குந்தர் கைகோளர் குடும்பத்தில் உள்ள மூத்த மகனின் தலையை வெட்டி ஒட்டக்கூத்தருக்கு காணிக்கையாக தரவேண்டுமென்று செங்குந்தர் நாட்டாண்மை உத்தரவிட்டார். 1008 செங்குந்த கைக்கோளர் தலைகள் பெற்ற பின்பே ஒட்டக்கூத்தர் ஈட்டி எழுபது இன்னும் செங்குந்தர் கைக்கோள முதலியார் களின் வரலாற்றை சொல்லும் நூலை எழுதி தந்தார். அப்போது காரைக்கால் பகுதியை சேர்ந்த மரபினர்கள் தலையை அறுக்க மறுத்து விட்டதால் அவர்களை அந்த சமூகத்தை விட்டு தள்ளி வைத்தனர் இன்று அவர்களை தலை கோடா முதலியார் என்று அழைக்கப்படுகிறார்கள் இவர்களுடன் மற்ற பகுதியில் வாழும் செங்குந்தர் கைக்கோள முதலியார் களிடம் பெண் கொடுத்தால் வாங்கல் இல்லை.


ஒட்டக்கூத்தர் பற்றிய நூல்கள்
புலவர் பேரரசர் ஒட்டக்கூத்தர்: புலவர் பி.மா.சோமசுந்தரம், சேக்கிழார் பதிப்பகம், 1987. பக்.1-149

நான் கண்ட ஒட்டக்கூத்தர்: சிறீநிவாச ரங்கசுவாமி, நாம் தமிழர் பதிப்பகம், 2004, ப்க்.1-90.

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்: டாக்டர் சி. சுப்ரமணியன்



சரஸ்வதி கோயில்
கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் ஒட்டக்கூத்தர் வழிபட்டு கட்டிய அம்பாள் அருள் பெற்றுள்ளார்.



இரட்டைத் தாழ்ப்பாள்” திறக்கப்பட்டது!

P. S. சாம்பசிவம் முதலியார் , அறங்காவலர் குழுத் தலைவர், அருள்மிகு வெள்ளீசுவரர் திருக்கோயில், திரு மயிலை.

"ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட் டைத் தாழ்ப்பாள்" என்ற தொடரை கவிச் சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தரைத் தாழ்த்திப் பேசுவதற்கே பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த வாசகம் ஒட்டக் கூத்தருக்குப் பெருமை சேர்ப்ப தாகும் என்பதை உணர்த்தினார் தமிழ றிஞர் டாக்டர் சிலம்பொலி சு. செல் லப்பன் அவர்கள்.

திருமயிலை வெள்ளீசுவரர் திருக் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணித் திங்களிலே ஒட்டக்கூத்தர் விழா நடை பெறுகின்றது. 12.9.1986 அன்று நடை பெற்ற ஒட்டக்கூத்தர் விழாவில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி இயக்குநராக இருக்கும் டாக்டர் சிலம்பொலி செல்லப் பன் அவர்கள் "ஒட்டக்கூத்தரின் கவிநயம்" என்ற தலைப்பிலே சிறப்பானதோர் சொற்பொ ழிவாற்றினார். காழ்ப்புணர்ச்சி யின் காரணமாக ஒட்டக் கூத்தரைப் பற்றி கூறப்பட்டு வரும் கட்டுக் கதை களையெல்லாம் மறுத்து ஒட்டக்கூத்த

ரின் பெருமைகளைப் புலப்படுத்தினார். ஒட்டக்கூத்தரின் கவிநயங்களைப் புரிந்து கொள்வதற்கு ஒரு தாழ்ப்பாளைத் திறந் தால் மட்டும் போதாது; அவரின் கவி தைகளை ஒரு முறைக்கு இருமுறை படிக்க வேண்டும்; இரண்டாவது தாழ்ப் பாளைத் திறந்தால் தான் கூத்தரின் கவிதைகளினுள்ளே புகமுடியும் என்று கூறினார். "ஓட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்" என்பதற்கு இதுதான் உண்மையான உட்பொருள். இந்தப் பழமொழி ஒட்டக் கூத்தரின் கவிதைகளின் சிறப்பைத்தான் குறிக்கி றதே தவிர கூத்தர் பெருமானை தாழ்த்து வதற்கு அல்ல என்றும் அறுதியிட்டுக் கூறினார். இக்கருத்து புலவரேறு வரத நஞ்சையா பிள்ளை அவர்களால் கூறப் பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

"இரட்டைத் தாழ்ப்பாளின்" உண் மையான பொருள். பொருள் திறக்கப்பட்டது அன்று!




ஒட்டக்கூத்தரின் சிலை

தஞ்சாவூர் மாவட்டம் தாராசுரத்தில் அமைந்துள்ள ஒட்டக்கூத்தர் ஜீவசமாதி

 கூத்தனூரில் அமைந்துள்ள சரஸ்வதி கோவிலில் உள்ள ஒட்டக்கூத்தர் சிலை


டாக்டர் சி. சுப்ரமணியன் ஒட்டக்கூத்தர் பற்றி எழுதிய புத்தகம்

திருவண்ணாமலை மாவட்டம் 

திருச்செங்கோடு ஒட்டக்கூத்தர் அரங்கம் 

ஒட்டக்கூத்தர் உச்சவர் சிலை, கூத்தனூர் 


ஒட்ட கூத்தரின் பேரன் ஒவ்வாத கூத்தனின் கல்வெட்டு

ஒட்டக்கூத்தரின் கொள்ளு பேரன் கல்வெட்டு

பாண்டியமண்டலம், சிவகாசி அருகே அம்மையார்பட்டியில் ஒட்டக்கூத்தர் பெயரில் கட்டிடம்





ஒட்டக்கூத்தரும் மணக்குடி ஊரும்.
1. கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தமுதலியார் பிறந்த மனை மணக்குடியில் கிழக்குத் தெருவில் உள்ளது.

2, கூத்த முதலியார் கைக்கோள மரபினர். மணக்குடியில் தொன்றுதொட்டு வாழ்பவர் யாவரும் பரம்பரையாக வரும் கைக்கோள முதலியார்களேயாவர். அவர்கள் கூத்தரைத் தங்கள் முன்னோருள் ஒருவர் என்று உரிமை யுடன் கூறுகின்றார்கள்.

3. கூத்தர் பிறந்து வாழ்ந்த மனைக்கு இன்றும் " ஓட்டக் கூத்தர் மனை' என்றே ஊரார்கள் சுட்டிக் கூறு கின்றார்கள்.

4. அம்மனையில் ஒட்டக்கூத்தரின் வழிவரும் குடும்பத்தினர் இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் தலைமுறைக்கு ஒரு ஆண் பிள்ளைக்கு ஓட்டக்கூத்தன் என்று பெயரிட்டு வருகின்றார்கள். இம் முறையில் இன்றைய தலைமுறைக்குரிய ஓட்டக்கூத்த முதலியார் வாழ்ந்து வருகின்றார்.

5, இன்றுள்ள ஒட்டக்கூத்த முதலியாரும், ஊரிலுள்ள கைக்கோள முதலியார்களும் கவிச் சக்கரவர்த்தியின் வாழையடி வாழையாகவரும் 'சுற்றமென்றே கூறுகின் றார்கள். தலைமுறைக்கு ஓருவராகப் பெயரிட்டுவரும் ஓட்டக்கூத்தருள் சிலர் புலமையும் தெய்வநலனும் செல்வ வளனும் பெற்றவர்களாகத் திகழ்ந்திருந்த கதைகளை இவர்கள் விரிவா கக் கூறுகின்றனர். இத்தகைய செய்திகளைச் செவிவழிச் செய்தி என்று தள்ளமுடியுமா? மரபுவழிச் செய்தியாக வல்லவோ இருக்கின்றது! மற்றும்,

6. கவிச்சக்கரவர்த்தி கூத்தர் சாமளை என்னும் சக்திவழி பாட்டினர் என்பதை தக்கயாகப் பரணியால் உணர லாகும், மணக்குடியில் சோழர் காலத்தில் உண்டான சக்தி கோயிலே, பழைய மணக்குடியின் வடக்கு எல்லையில் அழிந்து கிடக்கும் பிடாரிகோயிலாகும் கூத்தரால் வழிபாடு செய்யப்பெற்ற தேவி, இன்று கூரைக் 'கொட்டகையுள் தரையில் அமர்ந்திருப்பினும் 'சாமளாதேவி' என்ற பெயருடனேயே இருக்கின்றார்.

7. சாமளாதேவிக்கு ஒட்டக்கூத்தர் புத்தாண்டு நாளில் பெரும்படையல்' என்ற பெயரால் சிறப்பு வழிபாடு நிகழ்த்தியுள்ளார். அவர் வழிவரும் முதலியார்கள் தொடர்ந்து இன்றளவும் அவ்வழிபாட்டினைத் தமிழ்ப் புத்தாண்டு நாளில் நிகழ்த்திவருகின்றார்கள். (கூத்தர் பெருஞ்சோற்றுப் படையலிட்ட இடம், சிதைந்து கிடக்கும் பிடாரியார் கோயிலின் தென்மேற்கு மூலையில், திருக்குளத்தின் கரையில் இன்றும் இருப்பதைக் காணலாகும்.)

8. யாமள சாத்திரத்துள் கூறப்பெறும் சாமளாதேவி வழிபாடு. வடமொழிப் புலமையும் பெற்றிருந்த கூத்தரால் நிகழ்த்தப் பெற்றிருந்ததால், அவரை நன்கு மதித்துப் போற்றிய சோழமன்னரும் தமது ஆட்சியில் சாமளா தேவிக்குப் பல இடங்களில் கோயிலெடுத்துள்ளன ரென்று தெரிகின்றது.

9. பிடாரியார் கோயிலென்றும், சாமளாதேவி கோயி லென்றும் கூறப்பெறும் ஒட்டக்கூத்தர் வழிபட்ட சக்தி கோயில் சோழர் காலத்தில் செங்கல் திருப்பணியாகவே அமைந்திருக்கின்றது. செங்கற்கள், அளவில் பெரிய தாகவும், நிறமும் திண்மையும் பொருந்தியதாகவும் உள்ளன. கற்களைப்பற்றிப் பழம்பொருள் ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் கூறும்போது, இக்கோயில் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றி யிருக்கவேண்டுமென்பது திட்டமாகத் தெரிகின்றது.




ஒட்டக்கூத்தர் குருபூஜை 










Post a Comment

0Comments
Post a Comment (0)